கேதார கௌரி விரதம் கதை PDF | Kedara Gowri Vratham Katha

Dear Friends, in this post we are going to share கேதார கௌரி விரதம் கதை PDF / Kedara Gowri Vratham Katha PDF in Tamil language with you. This is a very popular fast in South India. This Kedar fast is a formal fast that begins in the month of Purattasi on Sukhilapaksha Ashtami and continues till the end of twenty-one days. On the day of the end of this fast, one should follow the rules and eat regularly. One who observes this fast of attaining all mental desires will enjoy all kinds of pursuits in this world and will eventually attain salvation.
பூஜாரம்பத்தில் மஞ்சளால் விநாயகரை செய்வித்து கந்தம் புஷ்பம் அறுகு சாத்தி நோம்பு விரதகாரர்கள் கையில் புஷ்பம் கொடுத்து விநாயகரை அர்ச்சனை செய்விக்க வேண்டியது.

கேதார கௌரி விரதம் கதை PDF | Kedara Gowri Vratham Katha PDF in Tamil

காப்பு

தாரணைய கூந்தற்க் கவுரி யியற்றியகே
தார விரதத்தை யான் படிக்க — சீரிலகும்
ஐந்து கறந்தந்திமுகத் தண்ணலடி யார்க்கருளுங்
கந்தமலர்ச்  செஞ்சரனே காப்பு
கேதாரீஸ்வரர் பூஜா விதி 
பூஜாரம்பத்தில் மஞ்சளால் விநாயகரை செய்வித்து கந்தம் புஷ்பம் அறுகு சாத்தி நோம்பு விரதகாரர்கள் கையில் புஷ்பம் கொடுத்து விநாயகரை அர்ச்சனை செய்விக்க வேண்டியது.
அதற்கு மந்திரங்களாவன :
ஓம் சுமுகாய நம:
ஓம் ஏக தந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் துமகேதுவே நம:
ஓம் கனாத்யக்ஷ்ரீய நம:
ஓம் பாலச்சந்திராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்பபகர்னாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் மஹாகணாதிபதயே  நம:
என்னும் சோடச நாமங்களை யோதி, நாநாவித பத்திர புஷ்பமிட்டு, தூபம் ஆகிர ராபயாமி தீபம் தற்ஸயாமி என்று சொல்லி தூபதீபம் கொடுத்து, தக்ஷனை தாம்பூலம் நெய்வேத்தியம் வைத்துத் தீபாராதனையான பிறகு ஸ்ரீ கேதாரீஸ்வரரை  ஆவாகஞ்செய்ய வேண்டியது.
அதாவது அம்மியையுங் குழவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்திக்  குங்குமம் கந்தம் முதலிய பரிமள திரவியங்களை அணிவித்து பருத்தி மாலையிட்டு, புஷ்பன்சாத்தி  அதனெதிரில் கலசம் நிறுத்தி அதற்கு பருத்திமாலை புஷ்பம் சாத்தி, நோம்பு விரதம்னுஷ்டிப்பவரை அருகே அமர செய்து கேதாரீஸ்வரரை  மனதில் தியானம் செய்து கொள்ள சொல்லி காசி கங்கா தீர்த்த திருமஞ்சன மாட்டியது போலும் பட்டு பீதாம்பரம் ஆபரனிதிகளால் அலங்கரித்து போலும் மனதில் சங்கல்பம் செய்து கொள்ள சொல்லி, வில்வம் தும்பை கொன்றை ஆகிய மலர்களால் ஈஸ்வரரை கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்விக்க வேண்டும்.
ஓம் சிவாய நம:
ஓம் கேசவாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் சங்கராய நம:
ஓம் கங்காதராய நம:
ஓம் நீலகண்டாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் கிருஷ்ணாய நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் ஈசாந்நியா நம:
ஓம் கைலசவாசாய நம:
ஓம் திரிசூலாய நம:
ஓம் மழுவேந்திராய நம:
ஓம் மானேந்திராய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சதாசிவாய நம:
ஓம் அச்சுதாய நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் அரூபாய நம:
ஓம் ஆனந்தரூபாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் சூலபாணியே நம:
ஓம் சிவபூசாய நம:
ஓம் காலகண்டாய நம:
ஓம் கபாலமுர்த்தியே நம:
ஓம் பரமகுருவே நம:
ஓம் சாந்தருத்ராய நம:
ஓம் மார்க்கண்டாய நம:
ஓம் திரிபுரதகனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் பார்வதிபிராணேசாய நம:
ஓம் சற்குருவாய நம:
ஓம் நந்திகேஸ்வராய நம:
ஓம் கேதாரீஸ்வராய நம:
அர்ச்சனை செய்வித்து அவர்கள் கையில் புஷ்பம் அக்ஷதை கொடுத்து மும்முறை ப்ரதக்ஷணம் செய்ய செய்து, கையில் உள்ளதை சுவாமியின் மேல் போடச்செய்து , கற்பூர தீபாராதனை கொடுத்து, நெஇவெஇதியமும்,தாம்பூலமும் சமர்ப்பித்து தூபதீபங்காட்டி, அவர்களுக்கு நோம்புக் கயிறும் புஷ்பமும் அக்ஷதையும் கொடுத்து ஆசிர்வாதம் செய்யவும், அவர்கள் அக்ஷதையை சிரசின் மேல் போட்டுகொண்டு நோம்புக் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டியது.
நூல் 
ஆதி காலத்தில் ஸ்ரீகைலாயத்திலேயே  நவரத்தினங்களினா லிழைத்த  சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலு வீற்றிருக்கையில் பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் நாற்பத் தெண்ணாயிரம்  ரிஷிகள், அஷ்டவசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகாந்தருவுர் , சித்த வித்தியாதரர் , ஜனகஜனானந்தர், ஜனத்குமாரர் , தும்புருநாரதர், மற்றுமுண்டான தேவரிஷிகளும் பிரதிதினம் வந்து பரமசிவனையும் பார்வதி தேவியையும் பிரதிக்ஷின நமஸ்காரம் செய்துக் கொண்டு போவார்கள் .
இப்படியிருக்க ஒரு நாள் சமஸ்த தேவர்களும் ரிஷிகளும் வந்து ஈஸ்வரரையும் ஈஸ்வரியையும் பிரதிக்ஷண நமஸ்கார தோத்திரஞ் செய்து செலவு பெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் எதாஸ்தானங்களுக்கு போகிற சமயத்தில் பிருங்கி என்கின்ற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதி அம்மனைப் புறம்பாக தள்ளி ஈஸ்வரரை மாத்திரம் பிரதக்ஷண நமஸ்காரஞ் செய்து ஆனந்தக் கூத்தாடினார்.
அப்பொழுது பார்வதியம்மனுக்கு மஹா கோப முண்டாகி பிரம்ம விஷ்ணு ருத்திரன் தேவந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேர்வகளும் நாற் பத்தொண்ணாயிரம்  ரிஷிகளும் கிண்னரர் கிம்புருடர் கருட காந்தருவர் சித்த வித்தியாதரர் ஜனகஜனானந்தர், ஜனத்குமாரர் , தும்புருநாரதர் கௌதமர் அகஸ்தியர் மற்றுமுண்டான தேவர்களும் வந்து ஈஸ்வரரையும் நம்மையும் கண்டு வணங்கிப் போகின்றனர்.
இந்த பிருங்கி ரிஷி நம்மை புறம்பாகத் தள்ளி ஈஸ்வரரை மாத்திரம் நமஸ்கரித்து நின்றானே என்று கோபத்துடனே பரமேஸ்வரி கேட்க பரமேஸ்வரன் சொல்லுகிறார்: “பர்வத ராஜகுமாரியே, பிருங்கி ரிஷி பாக்கியத்தைக் கோரியவனல்ல! மோக்ஷத்தைக் கோரியவனான படியால் எம்மை மாத்திரம் பிரதக்ஷன நமஸ்காரஞ் செய்தான்” எண்று  சொல்ல, பரமேஸ்வரி பிருங்கி ரிஷியைப்  பார்த்து, “ஒய் பிருங்கி ரிஷியே! உன் தேகத்திலே இருக்கிற ரத்த மாமிசம் நம்முடைய கூறாச்சுதே அவைகளை நீ கொடுத்துவிடு” எண்று  சொல்ல, அப்பொழுது பிருங்கி ரிஷி தன் சரீரத்திலிருந்த ரத்தமாமிசத்தை உதறி விட, ஈஸ்வரி, தன்னுடைய கூறாகிய ரத்த மாமிசத்தை எடுத்து கொள்ள, பிறகு பிருங்கி மஹாரிஷி நிற்கமுடியாமல் அசத்தனாயிருபதைப் பார்த்த பரமேஸ்வர் “ஏ பிருங்கி மஹாரிஷியே! ஏன் அசத்தனானாய்?” என்று கேட்க, பிருங்கி பரமனை வணங்கி, “பரமேஸ்வரா! அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் வணங்கினதால் அம்பிகை கோபித்து அடியேனுகளித்த தண்டனை இது” என்று கூற, பரமேஸ்வரன் மனமிரங்கி, ஒரு தண்டைகொடுக்க, பிருங்கி மகாரிஷி தண்டை உன்றிக்கொண்டு மறுபடியும் பரமேஸ்வரரை நமஸ்கரித்துவிட்டு ஆசிரமத்திற்கு  எழுந்தருளினார். பிறகு பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து நீர் என்னை உபேஷை செய்யலாமோ இனி எனக்கு காரியமென்னவென்று கைலாயதைவிட்டு பூலோகத்தில் வால்மீக மஹ ரிஷி சஞ்சரிகா நின்ற பூங்காவனத்தில் ஒரு விருக்ஷத்தின் அடியில் எழுந்தருளியிருந்தாள்.
அத்திசையில் பன்னிரண்டு ஆண்டு மழையின்றி உலர்ந்து வாடியுமிருந்த விருக்ஷங்களெல்லாம் துளிர்த்துத் தழைத்து; புஷ்பித்து; காய்த்தும் பழுத்து இன்னும் அநேக பூச்செடிகளெல்லாம் மல்லிகை, முல்லை, கோங்கு இருவாக்ஷி, மந்தாரை, பாரிஜாதம், சண்பகம், சிறுமுல்லை , புன்னை, பாதிரி, வில்வம், பத்தி, துளபம் மற்றும் முண்டான சகல ஜாதி புஷ்பங்கள் விஸ்தாரமாய்ப் புஷ்பித்து பரிமளித்து சுற்றிலும் நாலு யோசனை விஸ்தீரனம் பரிமளம் வீசீனது அந்தச் சமயத்தில் வால்மீக மகாரிஷி தம் பூங்காவனத்தைப் பார்த்து அதிசயப்பட்டு பன்னிரண்டு வருஷம் மழையில்லாமல் உலர்ந்திருந்த விருஷங்களெல்லாம் இப்பொழுது துளிர்த்துப் புஷ்பித்துக் காய்த்துப் பழுத்திருகின்றன. ஆச்சிர்யம் என்னவோ தெரியவில்லையென்று மனதில் நினைத்துக் கொண்டு பூங்கவனதிற்கு வந்தார்.
வந்தவர் சகல புவன கர்த்தாவாகிய பரமேஸ்வரன், பரமேஸ்வரி, பிருமா, விஷ்ணு வந்திருக்கிறார்களோ அவர்களைக் காணவேண்டுமென்று அந்த வனமெல்லாம் சுற்றி ஆராய்ந்து பார்க்கையில் ஸ்ரீ பார்வதிதேவி ஒரு வில்வ விருக்ஷத்தினடியில் எழுந்தருளியிருகக் கண்டு மூவருக்கும் முதன்மையான தாயே முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நார்பத்தெண்ணாயிரம் முனிவர்களுக்கும் ஒப்பற்ற தெய்வமாய் நின்ற பராசக்தியான ஈஸ்வரியே! நான் எத்தனை கோடி தவஞ்செய்தேனோ , இந்த பூங்காவனத்திலே எனக்குக் காக்ஷி கொடுக்க கைலாயதைவிட்டு, பூலோகத்திற்கு நீர் எழுந்தருளினதென்னவோ வென்று மிகவும் விநயமுடுன் தோத்திரஞ் செய்து வந்த காரணத்தை அடியேனுக்கு திருவுளம் பற்ற வேண்டு மென்று வால்மீக முனிவர் கேட்க,பார்வதி தேவியார் “வால்மீகமுனிவரே ! ஸ்ரீ கைலாயதிலேயே பரமேஸ்வரரும் நாமும் ஓர் நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றுக்கையில் பிரும்மா விஷ்ணு தேவேந்திரன் முதலான தேர்வகளும் மற்றுமுண்டான மஹா இருடிகளும் வந்து இருவரையும் நமஸ்கரித்துப்  போவார்கள். பிருங்கிமுனி சுவாமியை மாத்திரம் நமஸ்கரித்து நம்மைப் புறம்பாகத் தள்ளினான்.
அப்போது இவனா நம்மை புறம்பாக தள்ளுகிறவனென்று கோபத்துடன் என் கூறான இரத்த மாமிசத்தை வாங்கிக் கொண்டேன். அப்போது பரமேஸ்வரர் அவனுக்கு ஒரு தண்டு கொடுத்தார். இப்படிச் செய்யலாமொவென்று கேட்டதற்கு அவர் மறுமொழி சொல்லவில்லை. ஆகையால் நமக்குக் கோபம் பிறந்து பூலோகத்திற்கு வருகிற பொழுது இந்த பூங்காவனத்தைக் கண்டு இங்கே தங்கினோம்” என்று பார்வதியம்மையார் வால்மீகருக்கு உரைக்க, அவரும் அம்பிகையை தன் ஆசிரமத் திற்க் கெழுந்தருளும்படி வேண்ட, அம்பிகையும் அவரிஷ்டபடியே எழுந்தருள, முனிவர் அம்மனிருக்க ஒரு ஆசிரமும் ஒரு நவரத்தின சிம்மாசனமும் உண்டுபண்ணி அந்த சிம்மாசனத்தின் மீது எழுந்தருளின பின் பரமேஸ்வரி வால்மீக முனிவரைப் பார்த்து “ஓ தபசியே! இந்த பூலோகத்தில் நான் ஒரு விரதம் அனுஷ்டிக்கவேண்டும் நூதனமும் மேலானதுமான விரதம் ஒன்றிருகுமாயின் அதை எனக்கு சொல்லவேண்டும்” எண்று கேட்க, வால்மீக முனிவர் தொழுது “தாயே! லோக மாதாவே! அபிராமியே! திரிபுரசம்மாரி!சிவகாமி! கௌரவ கைலாசவாசகி! விபூதி ருத்ராக்ஷி! கிருபாசமுத்திரி! கிருபாநந்தி வேதஸ்வரூபி! உம்முடைய சந்நிதானத்தில் அடியேன் ஒரு விண்ணப்பம் செய்கிறேன்; கோபமில்லமால் கேட்டு திருவுள்ளம் பற்றவேண்டும் ; என்று சொல்ல, அதென்னவென்று அம்பிகை கேட்க, “ஜெகத்ரக்ஷகியே! இந்த பூலோகத்தில் ஒருவருக்கும் தெரியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோம்பென்று பெயர்.
அதை இதுவரையில் யாரும் அனுஷ்டிக்க வில்லை. நீர் அந்த விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்டசித்தியாகும் ” எண்று சொன்னார். அதைப் பரமேஸ்வரி கேட்டு “அந்த விரதம் எக்காலத்தில் எவ்விதமாக அனுஷ்டிக்க வேண்டுமென்பதை விவரமாய்ச் சொல்லவேண்டும்” என்று கேட்க, வால்மீகர் சொல்லுகிறார். “புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் தீபாவளி அமாவாசை வரைக்கும் இருபத்தொரு நாள் பிரதி தினம் ஸ்நானஞ் செய்து சுத்த வஸ்திரமனிந்து ஆல வ்ருக்ஷதின் கீழ் சிவலிங்கப் பிரதிக்ஷை செய்து அபிஷேகஞ் செய்து விபூதி சந்தனாக்ஷதை  புஷ்பஞ் சாத்தி வெள்ளவுருண்டை,சந்தன வுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம், வாழைபழம், தேங்காய், பாக்கு , வெற்றிலை இதுகளை வகைக்கு ஒன்றாக வைத்து வில்வார்ச்சனை தூபதீபம் நெய்வேதியஞ் செய்து நமஸ்கரித்து இருபத்தோரிழையிலே ஒரு கயிறு முறுக்கி அதைத் தினந்தினம் ஒருமுடியாக இருபத்தொரு நாள் முடிந்து தினமும் உபவாசமிருந்து நெய்வேதியஞ் செய்த அதிரசத்தையுமுண்டு  இருபத்தொருநாளும்  கிராமமாக இவ்விரதத்தை அனுஷ்டித்தால், இருபத்தோராம் நாள்; தீபாவளி அமாவாசை தினம் பரமன் ரிடபவாகனருடராய் காக்ஷி யளித்து கேட்ட வரத்தையுங் கொடுப்பார்” என்று வால்மீகர் சொல்லக் கேட்ட அம்பிகை மகிழ்ந்து அதேபிரகாரம் ஐப்பசி மாதம் சுக்கில பட்சம் தசமி முதல் அமரபட்சமும் சதுர்த்தசி அமாவாசைவரை இருபத்தொரு நாளும் வால்மீகள் தெரிவித்தபடி நியம நிஷ்டையுடன் உபவாசமிருந்து விரதன் அனுஷ்டிக்க பரமேஸ்வரியின் விரதத்திற்கு மகிழ்ந்த பரமன், தேவகணங்கள் புடைசூழ காக்ஷியளித்து, இடபாகத்தைப் பரமேஸ்வரிகுக் கொடுத்து , அர்த்தநாரி ஈஸ்வரராக கைலாயதிர்கெழுந்தருளி வீற்றிருந்தார்.
இவ்விரதத்தின் மேன்மையைக் கண்ட தேவர்கள், இருடிகள் முதலானவர்களும் அன்று முதல் இந்த விரதத்தை அனுஷ்டித்து வரலாயினர்; தேவகன்னியர் அவ்விரதத்தை கங்கை கரையில் அனுஷ்டிப்பதை பூலோகத்தில் ஓர் அரசனுடைய குமார்த்திகளான புண்ணியவதி; பாக்கியவதி எனும் இரு பெண்கள் தன் தகப்பன் நாடு நகரிழந்தணன் பயனாய் விவாகமாகாத கன்னியர் கங்கைக் கரைவர, அச்சமயம் தேவகன்னிய ரியற்றும் புசனையைக் கண்டு அதன் விபரமறிந்து தேவமங்கையர் கொடுத்த நோம்பு கயிற்றையும் பிரசாதத்தையும் பெற்று வீட்டிற்குப்போக வீடு அடையாளந் தெரியாமல் குச்சு வீடு மாடமாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வர்யம் பெருகியிருக்கும் புதுமையைக்கண்டு ஆச்சிர் யமடைந்து நிற்கையில்; தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்து சென்று சுகமே வாழ்ந்துவரும் நாளில் இராஜகிரி அரசன் புண்ணிவதியையும் அளகாபுரியரசன் பாக்கியவதியையும்   மணந்து தம்தம் பகுதிகளுக்குச் சென்று புத்திரபாக்கியதுடன்  வாழ்ந்து வந்தனர்.
இங்ஙனம் வாழ்ந்து வரும் நாளில் பாக்கியவதி தன கையிலனிந்திருந்த நோம்புக்கயிற்றை அவரைப் பந்தளின்மேல் போட்டு மறந்துபோனதின் விளைவாக பாக்கியவதியின் நாட்டை வேற்றசன் கைப்பற்றிக்கொண்டு இவர்களை ஊரை விட்டுத்துரத்திவிட்டான். பாக்கியவதியும் அவள் புருக்ஷனும் நித்திய தரித்தரர்களாகி உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி இருக்கையில் நோம்புகயிறு அவரைப்பந்தலி லிருந்தால் அவரைக்காய் மிகுதியாகக் காய்க்க, பாக்கியவதி அந்த அவரைக்காய்களை  சமைத்துப் புசித்து ஜீவித்து வந்தனர்.
இப்படியிருக்கையில் ஒருநாள் பாக்கியவதி தன குமாரனையழைத்து, அப்பா நாம் நாடு நகரமிழந்து உண்ண  உணவுக்கும், உடுக்க ஆடைக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், ஆகையால் நீ இராஜகிரிகுப் போய் உன் பெரிய தாயான புண்ணியவதி சகல ஐஸ்வர்யதுடனும் வாழ்வதால் அவளிடத்தில் நம்முடைய தற்கால நிர்வாகத்தைத் தெரிவித்து கொஞ்சம் திரவியம் கேட்டு வாங்கிக்கொண்டுவா என்று சொல்லி கட்டமுது கட்டிக்கொடுத்து வழிகூட்டி அனுப்பினாள்.
அந்த பிள்ளை இராஜகிரிக்குப்போய்   தன் பெரிய தாயாரைக்கண்டு தங்கள் வர்த்தமானங்களைச் சொல்ல, தாபந்திரயப்பட்டு  பிள்ளையை நாலுநாள் வைத்திருந்து சில வஸ்திரங்களும் ஆபரணமும் திரவியமுடிப்பும், கட்டமுதும் கட்டிக்கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக்  கொண்டு சிலதூரம் வந்து ஒரு குளக்கரையில் மூட்டையை வைத்துவிட்டு கட்டமுது சாப்பிடுகிற சமயத்திலே மூட்டையைக் கருடன் எடுத்துக் கொண்டு போய்விட்டது. அதுகண்ட சிறுவன் மனஸ் தாபப்பட்டு மீண்டும் பெரிய தாயாரிடஞ் சென்று நடந்ததைச் சொல்ல, அவள் விசனப்பட்டு, மறுபடியும் சில திரவியம் கட்டிக் கொடுத்துனுப்பினாள்.
அதையெடுத்துக்கொண்டு வரும்போது வழியிலே  ஒரு திருடன்வந்து சிறுவனிடமிருந்து மூட்டையைப் பறித்துக்கொண்டு போய்விட, சிறுவன் துக்கப்பட்டுக்கொண்டே மறுபடியும் பெரிய தாயாரிடம் சென்று “அம்மா! நாங்கள் செய்த பாவமேன்னவோ தெரியவில்லை,இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்து கொண்டு போய்விட்டான்” என்று சொல்லி வருந்தும் சிறுவனை தேற்றி, “குழந்தாய்! உன் தாயார் கேதாரி ஈஸ்வரர் நோம்பு விரதத்தை அனுஷ்டித்து வருகிறாளா இல்லையா?” என்று கேட்க, அந்த நோம்பு விரதத்தை அனுஷ்டிக்கிரதில்லை.
முன்னே நோற்ற  கயிறையும் அவரைப் பந்தளின்மேல் போட்டுவிட்டாள். அன்று முதல் இவ்வித கஷ்டங்களெல்லாம் வந்ததென்று தெரிகிறது” என்று கூறினான். இதைக்கேட்ட புண்ணியவதி மிகவும் மனம்வருந்தி ஐப்பசி மாதம் வருந்தனிலும் சகோதரி குமாரனை தன்னிடமே நிறுத்திக்கொண்டு ஐப்பசிமாதம் தான் நோற்கிற நோன்போடுகூட  பாகியவதிக்கும் ஒரு பங்கு நோன்பு வைத்து நோற்று அந்த நோன்புகயிரும் பலகாரமும் பாகு வெற்றிலை மஞ்சளும் இன்னும் சில ஆடையாபரனங்க்களும் திரவியமும் கொடுத்து காவலாக சேவகரையுங் கூடி இனிமேலாவது இந்த நோன்பை விடாமற் நோற்கச்சொல்லி சில புத்திமதிகளையும் சொல்லியனுப்பினாள்.
பெரிய தாயாரிடம் விடைபெற்று வரும் போது முன்னே வழியில் பரித்துப்போன திருடன் திரவியத்தை கொடுத்துச் சென்றான். கருடனும் மூட்டையைக் கொண்டுவந்து போட்டுவிட்டு உன் தாய் கேதாரீஸ்வரர் நோன்பு விரதத்தை விட்டுவிட்டதினாலேயே இவ்விதம் வந்தது இனிமேல் பயபக்தியுடனே நோன்பு நோற்கச் சொல், என்று சத்தமுண்டாக சிறுவன் ஆச்சரியப்பட்டு பயபக்தியோடும் சந்தோஷத்தோடும் தன வீட்டுக்கு வந்து தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப்பட்ட நோன்பு தோரணத்தையும் பலகாரத்தையும் கொடுத்து நடந்த சவிச்தாரங்களையுஞ் சொல்லக்கேட்ட பாக்கியவதி, “மெய்தான்! என் ஆண்காரத்தினால்  கெட்டேன்” என்று சொல்லி ஸ்நானஞ் செய்து கேதாரி ஈஸ்வரரை நமஸ்காரஞ் செய்து கையிற்றை வாங்கிக் கட்டிகொண்டாள். அந் நாழிகைக்கே தங்கள் பட்டணத்தைப் பிடுங்கிக்கொண்ட அரசன் பட்டணத்தையும், யானை சேனை பரிவாரங்களையும் பண்டி பண்டாரங்களையும், பகுதியும் கொடுத்துப் போய்விட்டான்.
பிறகு முன் போலவே பாக்கிய வதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே, தான் முன் நோற்கத் தவறினபடியினால் கேதாரீஸ்வரர் வறுமையைத் தந்தாரென்று அறிந்து அன்று முதல் நோன்பைக் கைபற்றியதால் சகல சம்பத்தும் பெருகிச் சுகபோகத்தோடு வாழ்ந்து வந்தனள்.
ஆதலால் இப்போலோகத்தில் கேதாரி விரதத்தை மனப்பூர்வமாக விரும்பிச் செய்பவர்களுக்குப் பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுக்கிரகிப்பார்.
அன்பர்கள் இந்த நோன்பை பக்தி விநயத் தோடுசெய்து சுகக்ஷேமங்களை அடைந்து மேன்மையாக வாழ்வீர்களாக.
Here you can download the கேதார கௌரி விரதம் கதை PDF / Kedara Gowri Vratham Katha PDF in Tamil by clicking on the link given below.

Leave a Comment