சித்ரகுப்த அஷ்டோத்ரம் | Chitragupta Ashtothram

சித்ரகுப்த அஷ்டோத்ரம்

இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு மரணத்தை நிர்ணயிக்கும் அந்த எமதர்ம ராஜாவிற்கு, உதவியாளராக இருப்பவர் சித்திரகுப்தர். உயிரைப் பறிப்பது எமதர்மனாக இருந்தாலும் ஒரு மனிதன் ‘இந்த நாளில் உயிரை இழக்க வேண்டும்’ என்ற கணக்கையும், மனிதன் ‘வாழும் காலத்தில் அவன் செய்த பாவ புண்ணிய கணக்கை வைத்து அவனுக்கு நரகமா சொர்க்கமா என்பதை நிர்ணயிப்பதும்’ இந்த சித்திரகுப்தர் தான். நம் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் இந்த சித்திர குப்தனை நாம் வழிபடுகின்றோமா? என்றால் இல்லை. மற்ற கடவுள்களை நினைப்பது போன்று சித்திர குப்தனை யாரும் தினந்தோறும் நினைத்து வணங்க மாட்டார்கள். ஆனால் சித்திர குபுத்தனுக்கு உண்டான மந்திரத்தை தினம்தோறும் ஒருமுறையாவது கூறி, மனதார நினைத்து வழிபட்டு வந்தால் நம் மரண காலத்தில் நமக்கு ஏற்படும் பயத்திலிருந்து விடுபடலாம். உங்களுக்கான சித்திரகுப்தர் மூல மந்திரம் இதோ.
சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம். லேகணிபத்த தாரிணம் சித்தர ரக்னாம்பரதரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
நல்ல அறிவாற்றலையும் திறமையான சிந்தனையையும் கொண்டவரே, எழுத்தாணி, ஏடு இவைகளை கையில் தாங்கிக் கொண்டிருப்பவரே, நவரத்தினத்தாலான உடையை அணிந்து இருப்பவரே, அனைத்து உயிர்களையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நடுநிலைமையுடன் நீதி கூறும் அரசராக இருப்பவரே, சித்திரகுப்தனானா உன்னை மனதார வணங்குகின்றோம்.
இந்த ஸ்லோகத்தை தினம் தோறும் உங்களால் உச்சரிக்க முடியவில்லை என்றாலும் வாரம் ஒரு முறையாவது அந்த சித்ரகுப்தனை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம் நம் மனமானது மரணபயத்திலிருந்து நீங்கும். உங்களால் முடிந்தால் அந்த சித்ரகுப்தனுக்கு, சித்ரா பௌர்ணமி அன்று உப்பில்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு விரதம் இருப்பது இன்னும் சிறந்தது.

0 thoughts on “சித்ரகுப்த அஷ்டோத்ரம் | Chitragupta Ashtothram”

Leave a Comment